News Channel

பத்திரிக்கையாளர் சந்திப்பு - மக்களின் தேர்தல் அறிக்கை



16.02.2026 (திங்கள்கிழமை) பகல் 12.00 மணிக்கு,
கும்பகோணம் சத்தியச்சோலை அரங்கில்,
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக
மக்களின் தேர்தல் அறிக்கை – 2026
அறிமுகப்படுத்தும் வகையில்
ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பு
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம் கிளை தலைவர்
ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின்
தலைமையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட
மக்களின் தேர்தல் அறிக்கை – 2026
தமிழகத்திற்கு தேவையான பல்வேறு அடிப்படை விஷயங்களை மையமாக கொண்டு
உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் முக்கிய அம்சங்களாக,

ஒழுக்கத்தில் சிறந்த தமிழ்நாடு

நீதியில் சிறந்த தமிழ்நாடு

சமச்சீரான வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாடு

சுத்தம், சுகாதாரம் போற்றும் தமிழ்நாடு

ஊழல் இல்லாத தமிழ்நாடு

மது மற்றும் போதை இல்லா தமிழ்நாடு

மக்கள் நல அரசு

கல்வி

வேளாண்மை

ஆகிய தலைப்புகள்
மக்களின் வாழ்க்கையை நேரடியாகத் தொடும் வகையில்
இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கை,
முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக மட்டும்
உருவாக்கப்பட்டதல்ல என்றும்,
தமிழக மக்களின் பொது பிரச்சினைகள்,
அவர்களின் எண்ணங்கள், தேவைகள்
ஆகியவற்றை மாநிலம் முழுவதும்
பலதரப்பு மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு
அதன் அடிப்படையில்
உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்,
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – மாவட்ட பொறுப்பாளர்
சகோதரர் முகமது யூனுஸ் அவர்கள்,
மக்களின் தேர்தல் அறிக்கை – 2026
என்ற பிரதியை
அனைத்து ஊடகவியாளர்களுக்கும் வழங்கி,
ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு
தெளிவான விளக்கங்களை அளித்தார்.

மேலும்,
இந்த நிகழ்ச்சியில்
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநகர தலைவி
சகோதரி ஹசீனா யூசுப்,
ஜமாத்தின் மூத்த உறுப்பினர்கள்,
ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள்
மற்றும்
பெருந்திரளான ஊடகவியாளர்கள்
கலந்து கொண்டு
நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த மக்கள் தேர்தல் அறிக்கை
தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு
ஒரு வழிகாட்டும் ஆவணமாக அமையும் என்ற
நம்பிக்கையும்
இந்த சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டது.