News Channel

SIR 2026 - நமது வாக்கு நமது உரிமை பிரச்சார இயக்கத்தின் சிறப்புக் கூட்டம்

SIR 2026 - நமது வாக்கு நமது உரிமை பிரச்சார இயக்கத்தின் சிறப்புக் கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி. முஹம்மது ஹனீஃபா மன்பஈ அவர்களது தலைமையில், ஜமாஅத் அகில இந்திய செயலாளர் ஜனாப். வாசிம் நதீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய SIR 2026 - நமது வாக்கு, நமது உரிமை பிரச்சார இயக்கத்தின் சிறப்பு நிகழ்வு கோவையில் - 13 நவம்பர் 2025 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் SIR 2026 ன் போது தமிழகத்தில் நாம் களமாட வேண்டிய அவசியம், திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஜமாஅத் தமிழக துணைத் தலைவர் ஜனாப். I. ஜலாலுதீன் சாஹிப் அவர்களும், ஜமாஅத் முன்னாள் மாநிலத் தலைவர் ஜனாப். ஷப்பீர் அஹமது சாஹிப் அவர்களும், ஜமாஅத் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் சாஹிப் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊழியர்கள் வருகை தந்தனர்.