சிந்தையைக் கிளறும் இந்நூலில் இஸ்லாமிய சமுதாயத்தின் பிரச்னைகள், பொறுப்புகள், கடமைகள் ஆகிய அனைத்தும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறுபட்ட ஆபத்துகள், துன்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்டிருப்பதற்கான ஒரே காரணம், அவர்கள் தங்களின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியம் காண்பித்ததுதான் என்றும், தங்களின் இந்த நிலையை மாற்றிக் கொள்ளாத வரையில் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழிநிலை ஒருபோதும் மாறாது என்றும் மனதில் பதியும்படி நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.