News Channel

அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை ஜும்மா பயான்

அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை 

28.11.2025
JIH மணப்பாறை கிளையின் சார்பாக 
 மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசலில் அண்டை வீட்டார் உரிமைகள் தொடர்பான ஜும்மா உரை நிகழ்த்தப்பட்டது.

 பரப்புரை செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை அன்று JIH 
 மண்டல பொறுப்பாளர் ஜனாப் சையத் முஹமத் அவர்கள் ஜும்மா உரையாற்றினார்கள்.
 அண்டை வீட்டார் உரிமைகள் தொடர்பாக நபிகள் நாயகம் காட்டிய வழிமுறைகளையும் அண்டை வீட்டார் உரிமைகள் தொடர்பான இஸ்லாத்தின் அழகிய நெறிமுறைகளையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் உரையில் குறிப்பிட்டார்.

 பள்ளிவாசலில் குழுமியிருந்த ஜமாத்தார்கள் ஜும்மா உரையினை ஆர்வத்துடன்
 கேட்டனர்.

 எல்லாம் வல்ல இறைவனின் உதவியுடன்
 ஜும்மா இனிதே நிறைவுற்றது.