News Channel

அண்டை வீட்டார் உரிமைகள் மதரஸா மாணவ மாணவிகளுக்கு புத்தகம் வழங்கும் நிகழ்வு

அண்டை வீட்டார் உரிமைகள் மதரஸா மாணவர்களுடன் கலந்துரையாடல் 
20-11-2025.

 அஸ்ஸலாமு அலைக்கும் மணப்பாறை பகுதியில் இயங்கி வரும் புர்கானியா நிஸ்வான் மதரஸாவில் உள்ள மாணவர்களை சந்தித்து அழகிய அண்டை வீடு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 அண்டை வீட்டார் உரிமைகள் எனும் JIH -ன் நாடு தழுவிய அளவிலான பரப்புரையின் ஒரு பகுதியாக சின்னஞ் சிறார்களை சந்தித்து அவர்களுடைய மனதில் அண்டை வீட்டார் குறித்தும் அவர்களுடன் பழகும் மாண்பை பற்றி நபிகளாருடைய அறிவுரையை விளக்கம் விதமாக அழகிய அண்டை வீடு எனும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
 
 மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் நாட்களில் அந்த புத்தகங்களில் இருந்து வினா விடை போட்டி நடத்தி அதற்கான பரிசுகள் வழங்குவதற்கான ஆயத்தம் செய்யப்பட்டது.

 மாணவ மாணவிகள் அக மகிழ்ச்சியுடன் புத்தகங்களை பெற்றுக் கொண்டு வரும் நாட்களில் போட்டிக்கு தயாரிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

 மணப்பாறை JIH
 கிளையின் தலைவர் ஜபருல்லா அவர்களின் அறிவுறுத்தலின்படி கிளையின் உறுப்பினர் ஜாகிர் உசேன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார்.


 எல்லாம் வல்ல இறைவனின் அருளால் புத்தகம் வழங்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.