News Channel

அண்டை வீட்டார் உரிமைகள் மடக்கோலை விநியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 

21-11-2025
 மணப்பாறை JIH 
 கிளையின் சார்பாக அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை தொடர்பான மடக்கோலைகள் விநியோகம் செய்யப்பட்டது.

 மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்திலும் முகமதியா பள்ளிவாசல் 
 மற்றும் தக்வா பள்ளிவாசல் ஆகிய இடங்களில் 
 மடக்கொலைகள் ஜும்மா தொழுகைக்குப் பிறகு சகோதரர்களிடம் வழங்கப்பட்டது.

 அண்டை வீட்டார் உரிமைகள் குறித்து இஸ்லாம் வலியுறுத்தும் நல்ல உபதேசங்களை பற்றி அவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்களை மடக்கோலைகளை படித்து பயன் பெறும்படி வலியுறுத்தப்பட்டது

 முன்னதாக மணப்பாறை பகுதியில் உள்ள ஆலிம் பெருமக்களை அழைத்து ஜும்மா பயான் குறித்து தலைமை அறிவுறுத்திய ஜும்மா உரையின் நகல் வழங்கப்பட்டிருந்தது.

 எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் சகோதரர்கள் மகிழ்வுடன் மடக்கோலைகளை பெற்றுச் சென்றார்கள்.