News Channel

நக்கீரன் கோபால் IFT வருகை

நக்கீரன் கோபால் IFT வருகை

கண்ணியத்திற்குரிய நக்கீரன் கோபால் அவர்கள் இன்று மதியம் 
IFT க்கு மரியாதை நிமித்தமாக வருகை புரிந்தார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
அகில இந்திய அளவில் நடத்தும் 
அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை குறித்து 
விரிவாக கலந்துரையாடினோம். 

இன்றைய காலத்தில் இது ஒரு வித்தியாசமான யாரும் செய்யாத பரப்பரையாக இருக்கிறது 
இது ஒரு நல்ல முயற்சி ‌என்று 
தன் மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

நக்கீரன் கோபால் அவர்களுக்கு 
மாநில கன்வீனர் 
S.சாகுல் ஹமீது அவர்கள் 
சமரசம் சிறப்பிதழ்,
அழகிய அண்டை வீடு,
மடக்கோலைகள் வழங்கினார்.

நக்கீரன் கோபால் அவர்களுடன் 
வருகை புரிந்த நண்பர்களுக்கும் ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் பரப்புரையின் இதழ்கள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

இந்நிகழ்வில் ஜமாஅ்த்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.


மேலும் 
VIP visitors dairy யில் 
தனது கருத்தை இவ்வாறு எழுதினார் 👇

வணக்கம். உங்கள் சமரசத்தின் வாசகன் நான்.

இன்று துவங்கும் “அழகிய அண்டை வீடு” அண்டை வீட்டாரின் உரிமையைப் பற்றிய பரப்புரை துவக்கம் நாடு தழுவிய அளவில் தாங்கள் எடுக்கும் இந்த உறவுகளைப் பேணும் நெடுமுயற்சி நம்மின் ஒற்றுமைக்கு ஒரு வலுசேர்க்கும்.

முக்கியமாக, “நம்மின் நல்ல அண்டை வீட்டார் யார்?”, “எது சிறந்த அண்டை வீடு?”, “சிறந்த சக நண்பர் யார்?” இதுபோன்ற தேர்ந்தெடுத்த உறவு பேணல் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த கைகோர்ப்பு.

உங்களின் இந்த புதுமையான “அண்டை வீட்டார்” நட்பு முயற்சி தழைத்து ஓங்குக. எதிர்கால சாதிமத சதிகளை ஒழித்து நம்மில் பேதமில்லாமல் ஒற்றுமையாய் வாழ வழிவகுக்கும் என்பது திண்ணம். 

இந்த சீரிய முயற்சி வெற்றிபெற நக்கீரன் உங்களுடன் கை கோர்க்கும்!

வாழ்த்துகளுடன்
நக்கீரன் கோபால்
21.11.2025