News Channel

நிர்வாகிகள் சந்திப்பு

சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு...

நவம்பர் 13;2025, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) சேலம் வட்டத்தின் சார்பில் மண்டல அமைப்பாளர் ஜனாப்: S.A.K.ஜெய்லானி அவர்கள் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகியும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. அருள் இராமதாஸ் அவர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, அகில இந்திய அளவில் ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.  சேலம் மாநகரில் தங்குதடையின்றி போதைப்பொருட்கள் கிடைப்பதையும் அதனால் இளைய சமுதாயம் மிகப்பெரிய பாதிப்படைவதையும் எடுத்துக்கூறி போதைப் பழக்கத்திற்கு எதிராக சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு நடத்திவரும் போதை ஒழிப்பு பிரச்சாரங்களையும் எடுத்துக் கூறினோம். மேலும் இதுபோன்ற சமூகப் பிரச்சினைகளில் இணைந்து செயல்படவும் அவருக்கு அழைப்பு கொடுத்தோம். அவரும் அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக வாக்குறுதி அளித்தார்.  இந்த சந்திப்பில் ஜமாஅத் சேலம் வட்ட பொறுப்பாளர்கள் ஜனாப்: F.அஸ்லம் , ஜனாப்: முஸ்தபா , ஜனாப் : ஹபீப் ரஹ்மான், சகோதரர்கள் ஆசிக் தாவூத், ஆதர் மற்றும் சாலிடாரி இளைஞர் அமைப்பின் மாநில செயலாளர் சகோதரர்: ஜாஃபர் அவர்களும் கலந்து கொண்டனர்.