News Channel

திருச்சி கூனிபஜார் ஆண்கள் ஊழியர் வட்டம் சார்பாக மணப்பாறையில் குடும்ப இஜ்திமா

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  திருச்சி கூனிபஜார் ஊழியர் வட்டம் சார்பாக குடும்பங்கள் இஜ்திமா மணப்பாறை பொன்னணியாறு சுற்றுலா தளத்தில் இன்று 19/11/2023 நடைபெற்றது. 
நிகழ்ச்சியின் துவக்கமாக சகோ.இர்ஷாத் அஹ்மத் அவர்கள்  இறை வசனம் ஓதி துவங்கி வைத்தார். 
மௌலவி. இத்ரீஸ் பாகவி அவர்கள் ஹதீஸ் தஸ்கீரில் நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலும், அவரை பின்பற்றிய சஹாபாக்கள் காலத்திலும் இஸ்லாத்தில் நடுநிலையை பேணுதல் மற்றும் தங்களுடைய குடும்பங்களை இஸ்லாமிய அடிப்படையில் எவ்வாறு வார்த்தமைத்தனர் என்பதை விளக்கி கூறினார். 
துவக்க உரையை ஜனாப்.அன்வர் சதாத் அவர்கள் உரையாற்ற, 
சிறப்புரையை அஸ்ஸலாம் இஸ்லாமிய கல்லூரி மற்றும் சங்கமம் கோ ஆபரேட்டிவ் சொசைட்டி வங்கியின் இயக்குனர் ஜனாப்.அமானுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.
 மனிதனை இறைவன் படைத்ததன் நோக்கம்? நம் வாழ்க்கையை இஸ்லாமிய ஒழுக்க விழுமங்களின் அடிப்படையில், குரானின் நிழலில் அமைத்துக்கொள்வதின் அவசியம். ஊழியர்களின் குடும்பங்களை எப்படி இஸ்லாமிய அடிப்படையில் வார்த்தெடுப்பது? இயக்கத்திற்காக நமது குடும்பங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

 இரண்டாம் அமர்வாக பங்கெடுத்த குடும்பங்களின் உறுப்பினர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் இஸ்லாமிய இயக்கத்திற்கு எவ்வாறு பங்காற்ற வேண்டும் என்ற தங்களுடைய ஆவல்களை பகிர்ந்தனர். இந்த உரையாடல் மிகச் சிறந்த படிப்பினையையும், ஊக்கத்தையும் பங்கெடுத்தவர்களிடம் மனதில் பதித்தது.

நன்றியுரையை கூனிபஜார் ஊழியர் வட்டம் பொறுப்பாளர் 
ஜனாப். முஹம்மது ஹனிபா அவர்கள் உரையாற்ற 
தொழுகை, மதிய உணவிற்கு பிறகு சுற்றுலா தளத்தில் சிறிது இளைப்பாரிவிட்டு, இயக்கத்திற்காக நமது குடும்பங்களை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் ஊழியர்கள் திரும்பினர் அல்ஹம்துலில்லாஹ்....!


kms pico download