News Channel

நாடு தழுவிய பரப்புரை மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்

தீன் நகர் 
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் CIO - children islamic organisation சார்பாக நாடு தழுவிய அளவில் "மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" என்ற தலைப்பில் பரப்புரையின் நடத்தப்பட்டு வருகின்றது. 
பரப்புரையில் ஓர் அங்கமாக ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் தீன் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி ஜாஃபர் சாதிக் மன்பஈ அவர்கள் தலைமையில் 
ராமநாதபுரம் தீன் நகர் சார்பாக 16/7/2025 புதன்கிழமை அன்று மாணவ மாணவிகளின் நிகழ்வுகள் நடைப்பெற்றது :
1. மரம் நடும் நிகழ்வு, 

2. சிறு சொற்பொழிவு, 

3. ஓவியம் வரைதல், 

4. மற்றும் மரங்களை நேசிக்கின்றோம் என்ற தலைப்பில் மரங்களைக் கட்டி அணைத்து உரையாடல் நிகழ்வும் நடைபெற்றது.
 
5. 12 மரக்கன்றுகள் நடப்பட்டன. 

6. மரங்களை நட்டு மரங்களின் பயன்கள், வளர்ப்பின் அவசியம், தேவை இல்லாமல் மரங்களை வெட்டுவதின் தீமைகள் குறித்து ஐந்து மாணவிகள் சிறு உரை நிகழ்த்தினர். 

1 அல் ஜாஸியா 
2 சுமையா 
3 சப்ரின் ஹம்னா 
4 வர்ஷினி 
5 முஹ்சினா.
 
ஓவியம் தீட்டுதல் நிகழ்வில் 
ஆறு மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர் : 
1 தாரா அகிஃபா 
2 அல் ஜாஸியா
3 சப்ரின் ஹம்னா 
4 ஆரோக்கான் 
5 அஜ்மல் கைஸ் 
6 லியானா .

ஆகிய மாணவிகள் கலந்து கொண்டனர். நாடு தழுவிய பரப்புரை தின் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

- JIH- ISLAMIC CENTRE CIRCLE