News Channel

தர்பியா நிகழ்ச்சி

திருப்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக  
ஆண்கள் - பெண்கள் உறுப்பினர், ஊழியர்,  அபிமானிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் ஐமாஅத் தலைவர் ஜனாப். முகமது காசிம் அவர்கள்  தலைமை வகித்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் வி.எஸ். அமீன் அவர்கள் கலந்துகொண்டார்கள்,  
மேலும் மண்டல பொறுப்பாளர் கே.எம். முஹம்மது அவர்களும் கலந்து கொண்டார்கள் மிக அழகிய உரைகள் நடைபெற்றது.
கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் இந்த நிகழ்வு முக்கியதுவம் வாய்ந்ததாக அமைந்தது 
மண்டல பொறுப்பாளர் கே.எம். முஹம்மது தலைமையில் புத்தக கலந்துரையாடல் நடைப் பெற்றது. 
மதிய அமர்வில்
வி.எஸ். அமீன் அவர்கள் ஐமாஅத் ஆலோசனை குழு உறுப்பினர் (ஜமாஅத் நோக்கங்களும் செயல்பாடுகளும்} என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார் 
 அனைவருக்கும் இந்த நிகழ்வு பயணுள்ளதாக அமைந்தது.