News Channel

போதை ஒழிப்பு பிரச்சாரம்

ரமலான் நகரில் 
போதை ஒழிப்பு பிரச்சாரம்

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் - JIH 
இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் சார்பாக
போதை ஒழிப்பு பிரச்சார
வாரத்தை  முன்னிட்டு 28.6.2025 சனிக்கிழமை மாலை : 7:00 முதல் 
இராமநாதபுரம் ரமலான் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் 
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


சிறப்பு விருந்தினர்கள்;

அதில் சிறப்பு விருந்தினராக 
சித்தார் கோட்டை  பழனிவலசை அரசு மேல்நிலைப்பள்ளி "தலைமை ஆசிரியர் முருகன்" அவர்களும், 

தீன்நகர் "தலைமை இமாம் ஜாஃபர் சாதிக் மன்பஈ" ஆலிம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.  
ரமலான் நகர் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் 

நிகழ்ச்சியின் துவக்கமாக ரமலான் நகர் துணை இமாம் ஷேக் அப்துல்லா தாஃவதி அவர்கள் கிராத் ஓதினார் 

ரமலான் நகர் தலைமை இமாம் மௌலவி , சம்சுதீன் பைஃஜி அவர்கள்
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நிகழ்ச்சியை அளகுற வழிநடத்தி தந்தார்

இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட 
இளைஞர்கள் 
ஜமாத்தார்கள் 
கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு டிபன் வழங்கப்பட்டது.