News Channel

சகோதர சமுதாய சொந்தங்களுடன் இஃப்தார் நிகழ்ச்சி.

சகோதர சமுதாய சொந்தங்களுடன் இஃப்தார் நிகழ்ச்சி...
27/09/1446 (28/03/2025) வெள்ளிக்கிழமை மாலை கடையநல்லூர் JIH கிளை சார்பாக ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளியில் வைத்து இஃப்தார் அமர்வு கிளைத் தலைவர் K. பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்றது.
துவக்கமாக மௌலவி முஸம்மில் புகாரி திருமறை வசனங்கள் ஒதி துவக்கி வைத்தார்.
ராபிதத்துல் உலமா மாநிலச் செயலாளர் & அஸ்ஸலாம் இஸ்லாமிய கல்லூரியின் பேராசிரியர் மௌலவி அஹ்மத் முஹ்யித்தீன் ஃபைஜி ஜமாஅத் அறிமுக உரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் சேயன் இப்ராஹீம் மற்றும் CITU தென்காசி மாவட்டச் செயலாளர் தோழர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்..
சமரசம் பொறுப்பாசிரியர் வி.எஸ். முஹம்மது அமீன் சிறப்புரையாற்றினார்.
. இந்த நிகழ்ச்சியில் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த 40 சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் நோன்பு கஞ்சி மற்றும் உணவு பார்சல் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியை ஜமாத் ஊழியர் முஹம்மது ரிழ்வான் வழிநடத்தினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை ஜமாஅத் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்..
கடையநல்லூர் கிளை...