News Channel

கோவையில் சங்கமித்த நூற்றுக்கணக்கான ஆலிமாக்கள்! ஹிதாயா இஸ்லாமியக் கல்லூரி முன்னாள் மாணவிகள் ஒருங்கிணைந்த இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் கடந்த 14 வருடங்களாக பயின்ற முன்னாள் மாணவிகள், தற்போதைய மாணவிகள் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் ஒன்று கூடிய மாபெரும் இஃப்தார் நிகழ்வு கோவை ஃபாத்திமா கனி மண்டபத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை (15 மார்ச் 2025) அன்று நடைபெற்றது.
 
ஹிதாயா கல்லூரியில் பயின்று தற்போது பல்வேறு இடங்களில் இஸ்லாமியப் பணி செய்துவரும் ஆலிமாக்கள் இந்நிகழ்வுக்காக தங்களுடைய கணவர்கள், குழந்தைகளோடு இஃப்தார் நிகழ்வுக்காக ஒருங்கிணைந்தனர். பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட தோழியர்கள் அனைவரும் நலம் விசாரித்து, பேசி, மகிழ்ந்து இஃப்தார் நிகழ்வு ஒரு விழாவாக, ஒரு சிறப்பான ஒன்றுகூடலாக மாற்றியமைத்தனர்.

ஹிதாயா கல்லூரி மாணவி சகோதரி. அஸ்மிதா அவர்கள் இறைவசனங்களை ஓதி நிகழ்வினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஹிதாயா முன்னாள் மாணவிகள் சங்கத்தின் தலைவர் ஆலிமா. சுமையா ஹாதியா அவர்கள் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்கள்.

அதனையடுத்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரையாற்றினார். ஹிதாயா இஸ்லாமியக் கல்லூரியை சமூக முன்னேற்றத்திற்காக நடத்தி வரும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாடெங்கும் செய்துவரும் பணிகள் குறித்தும், அதில் இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியம் குறித்தும் ஹிதாயா கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் இலத்திரனியல் நிகழ்த்துகை (Powerpoint Presentation) மூலம் கலந்துரையாடினார்.

தொடர்ந்து ஹிதாயா கடந்து வந்த பாதை – காணொளிப்பதிவாக திரையிடப்பட்டது. தாங்கள் கடந்து வந்த பாதையினை மாணவிகள் மகிழ்வோடு பார்த்து கடந்த கால நினைவுகளை மீட்டனர். இறுதியாக முன்னாள் மாணவிகள் சங்கத்தின் செயலாளர் ஆலிமா. ஆயிஷா சுமையா ஹாதியா அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

நிகழ்வினை பல்வேறு நினைவுகளை மீட்டமைத்து அழகுற தொகுத்து வழங்கினார் ஹிதாயா கல்வி அறக்கட்டளையின் இணைச் செயலாளர் ஆசிரியர். M. சலீம் அவர்கள்.

தொடர்ந்து இஃப்தார் மற்றும் விருந்து நடைபெற்றது. நிகழ்வில் ஹிதாயா கல்வி அறக்கட்டளை பொறுப்பாளர்கள், அறங்காவலர்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரப் பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.