News Channel

எல்லோருக்கும் முன்மாதிரி முஹம்மது நபிகளார் (ஸல்) - சிறப்பு பெண்கள் பொதுக்கூட்டம்

கோவை தெற்கு மண்டல பெண்கள் அணி நடத்திய சிறப்பு பெண்கள் பொதுக்கூட்டம் கோவை குனியமுத்தூர் பகுதியில் 25 செப்டம்பர் 2023 அன்று திங்கள் கிழமை நடைபெற்றது.
ஆரம்பமாக குனியமுத்தூர் கிளை நாஜிமா சகோதரி. மும்தாஜ் ஷாஹிபா அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்வைக் தொடங்கினார்கள். இந்நிகழ்வில் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்களும், தெற்கு மண்டல அமீரே மகாமி ஜனாப். முகம்மது பஷீர் அவர்களும், தெற்கு மண்டல நாஜிமா திருமதி. சலீனா பாரி ஷாஹிபா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வை மின் நகர் வட்ட நாஜிமா சகோதரி. மஹ்மூதா ஷேக் ஆதம் அவர்கள் வழிநடத்தி நிரைவுரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.