News Channel

மக்தப் மதரஸா ஆண்டுவிழா

மக்தப் மதரஸா ஆண்டுவிழா நிகழ்வுகள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
திருப்பூர் கிளையில் சார்பாக 
நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் குழந்தைகள் மக்தப் மதரஸா ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றன.

மக்தப் மதரஸா ஆண்டுவிழா 
வெங்கடேஷயா காலனி,
ரேணுகா நகர்,
முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்,
பழவஞ்சி பாளையம்,
கதிர் நகர்,
ஆகிய பகுதிகளில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 

ஒவ்வொரு நிகழ்வுகளிலும் மதரஸா மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. 

கிராத் ஓதுதல்,
பாங்கு சொல்லுதல்,
வினாடி வினாக்கள்,
 ஹதீஸ் மனனம்,
துவா மனனம்ம்,
குர்ஆன் மனனம்,
பட்டிமன்றம் என்று பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
மாநகர,கிளை பொறுப்பாளர்கள்,
நன்கொடையாளர்கள் 
சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

மாணவ மாணவிகளின் திறமைகளை பார்த்து அவர்களை பெற்றோர்கள் மனமார்ந்த பாராட்டினார்கள் வாழ்த்துக்கள் பரிமாறினார்கள்.

இந்நிகழ்வில் மாணவ. மாணவிகள்,
பெற்றோர்கள் ஆர்வமாக,
திரளாக கலந்து கொண்டார்கள்.