News Channel

கிருஸ்துமஸ் விழாவில் ஜமாஅத் மகளிர் சகோதரிகள் பங்கேற்பு

"கிருஸ்துமஸ் விழாவில் ஜமாஅத் மகளிர் அணி பங்கேற்பு"

திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங் யுனிட் பகுதியில் இயங்கி வரும் 
- லவ் ஆஃப் ரெகொபோத் சபை
- கெத்சமெணே சபை
- நாச்சி பாளையம் சர்ச் 

ஆகிய மூன்று தேவாலயங்களுக்கு 
இன்று 25.12.2024 காலை 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முதலிபாளையம் மகளிர் அணி சகோதரிகள் விஜயம் செய்து கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் பரிமாறினார்கள்.


தேவாலய பொறுப்பாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இன்முகத்துடன் மகளிர் சகோதரிகளை வரவேற்று தங்கள் மகிழ்ச்சிகளை தெரிவித்து பெருமகிழ்வு கொண்டார்கள்.

உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் எங்களுக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாம் எல்லோரும் ஒன்று தான் 
நம்முடைய இந்த 
"மத நல்லிணக்கம்" என்றென்றும் தலைத்தோங்கி இருக்க வேண்டும் என்று தேவாலய பொறுப்பாளர்கள் மகிழ்வுடன் கூறினார்கள். 

மகளிர் அணி சகோதரிகளும் வேதங்கள் கூறியிருக்கும் அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையை நாம் சிறப்பாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் நம் வாழ்வு மேலோங்கும் என்று தெரிவித்தார்கள்.

தேவாலய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் "இனிப்புகள்" மற்றும் "இஸ்லாமிய நூல்களை"
 ஜமாஅத் சகோதரிகள் அன்பளிப்பாக வழங்கி மகிழ்ச்சி பரிமாறி வந்தார்கள்.

இந்நிகழ்வில் 
ஹவுசிங் யூனிட் மகளிர் அணி நாஜிமா
மற்றும் ஊழியர்கள், ஆதரவாளர்கள் 
மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) 
மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.