News Channel

ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மெக்கானிக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

நீங்கள் எங்கே சென்றுக் கொண்டு இருக்கிறீர்கள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக நீங்கள் எங்கே சென்றுக் கொண்டு இருக்கிறீர்கள் என்ற தலைப்பில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மெக்கானிக்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
08.12.2024 ஞாயிற்றுக்கிழமை  மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை  பழையப்பேட்டை  மதராஸயே தாருஸ்ஸலாமில் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி திருக்குர்ஆன் விரிவுரை ஆற்றினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நகர தலைவர் ஜனாப் சிபகத்துல்லாஹ் தலைமை வகித்தார்.

ஜனாப் முஸ்டாக் அஹ்மத் அனைவரையும் வரவேற்றார்.

 ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மண்டல பொறுப்பாளர் ஜனாப் அப்துல் ஹமீத் அவர்கள் ஜமாத்தின் பணிகள், முஸ்லிம் சமூகத்தின் பொறுப்புகள், கடமைகள், முன்மாதிரி முஸ்லிம்கள்,
 இஸ்லாமிய அடிப்படையில் எப்படி திகழவேண்டும் என்று சிறப்பாக எடுத்துரைத்தார்.

இறுதியாக ஜனாப் இப்ராஹிம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் 50 மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியினை
ஜனாப் முஹம்மத் மாஸ் வழிநடத்தினார்.

எல்லா புகழும் இறைவனுக்கே