News Channel

SPIRITUAL DEVELOPMENT COURSE

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ! 

GIO தேசிய கூட்டமைப்பு, தேசிய அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு
 "SPIRITUAL DEVELOPMENT COURSE" என்ற பாடநெறியை வடிவமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் (2024) வரை மூன்று மாத கால பாடநெறியாக அமைக்கப்பட்டு, 
பங்கேற்பாளர்களின் இறையாண்மை,
 இறை தொடர்பை வலுப்படுத்துதல், 
சுய ஆய்விற்கான அற்பணிப்பு, 
சுய கட்டுப்பாடு போன்ற பாடத்திட்டமாக நடத்தப்பட்டது.‌ 
இப்பாடநெறியில், ஆன்லைன் நேரடி வகுப்புகள், கலந்துரையாடல்கள், 
தேர்வுகள் என புகழ்பெற்ற குறிப்பிடத்தகுந்த அறிஞர்கள் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றன.  

இந்த பாடநெறி தேர்வில் GIO தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியினுடைய மாநில செயலாளர் சகோதரி. நுஹா மரியம் முதல் பரிசைப் பெற்றுள்ளார். இந்த வெற்றி அவரது இறை அற்பணிப்பை பிரதிபலிக்கிறது. இச்சாதனை GIOவின் இலக்குகளை மேலும் வலுப்படுத்தும் வழிக்கல்லாக விளங்குகிறது. உங்கள் பயணம் தொடர்ந்து சிறப்புடன் விளங்கவும், பலருக்கும் இச்சாதனை வழிகாட்டியாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக! (ஆமீன்)

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்!

-GIO TN & PY.