News Channel

Sura An Noor Quiz competition prize distribution

 ஓசூர் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை யின் ஒரு பகுதியாக சிறப்பு வினாடி வினா போட்டி அக்டோபர் 2ம தேதி நடைபெற்றது. 

 இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு இன்று 27.10.24 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு ஜமாஅத் அலுவலகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் துவக்கமாக சிறுமி பாத்திமா கிராஅத் ஓதினார்.
 ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் ஓசூர் நாஸிம் முஹம்மது ஆரிப் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்றார். 
ஓசூர் பெண்கள் வட்ட நாஸிமா பர்வீன் தாஜ் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். 
பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டன. 

மேலும் இந்த வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டவர்கள் சூரா நூர்  விளக்கவுரை படித்ததின் அனுபவத்தை  பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் GIO மாணவிகள் ஃபபியா அஞ்சும்,
 சல்மா அஞ்சும், அனீசுல் நிஷா மற்றும் ஹீனைன் ஷேக் அனைவருக்கும் நன்றி கூறினர். 
நாஸிமா பர்வீன் தாஜ் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்.
 இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சுமார் 15 பேர் கலந்து கொண்டனர்.