News Channel

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை - கல்வி நிலையங்களில் சந்திப்பு

கடையநல்லூர் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் வட்டத்தின் சார்பாக கடையநல்லூரை சுற்றியுள்ள அரசு கலை கல்லூரி மற்றும் Joy மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராயல் பப்ளிக் ஸ்கூல் ஆகியவற்றின் முதல்வர்களைச் சந்தித்தார்கள். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட முதல்வர்கள் இந்தப் பரப்புரை பற்றி கூறும் போது இது காலத்தின் கட்டாயம் என்பதாக கூறினார்கள்.
குறிப்பாக Joy ஸ்கூல் முதல்வர் ஜோதி அவர்கள் இது ஒரு நல்ல முயற்சி. இது போன்ற சீர்தீர்த்த முயற்சிகள் தனி நபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறதா? என்றால் சிலர் அப்படி நினைக்கிறார்கள்.
தனி நபருக்கு ஏற்றவாறு நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த சந்திப்பு கடையநல்லூர் மகளிர் வட்ட பொறுப்பாளர் சகோதரி சுவேரியா
மற்றும் ஆயிஷா, சகிலா, சமீமா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.