News Channel

மீலாது நபி சிறப்பு நிகழ்ச்சி

அனைவருக்குமானவர் அண்ணல் நபிகளார் (ஸல்) என்கின்ற தலைப்பில் மீலாது நபி சிறப்பு நிகழ்ச்சி மதுரை மாவட்டம் குராயூர் ஊரில் நடைபெற்றது .  

இந்நிகழ்ச்சிக்கு குராயூர் பொதுமக்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் என ஊரில் உள்ள மொத்த மக்களுக்கும் இந்த நிகழ்ச்சியை குறித்து அறிமுகப்படுத்தி அழைப்பு விடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்... 
அதன் விளைவாக ஆண்கள் பெண்கள் என சுமார் 200 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள். சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள் 100 க்கும் அதிகமானோரும் ஜமாத்தார்கள் 100 க்கும் அதிகமானோரும் மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்புரை நிகழ்த்துவதற்காக சிறப்பு அழைப்பாளராக திருச்சி அஸ்ஸலாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் வருகை புரிந்து சிறப்புரையாற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் மௌலவி முகைதீன் குட்டி உமரி அவர்கள் தலைமையேற்று நடத்தித் தந்தார்கள்.  

விருதுநகரைச் சார்ந்த Virudhunagar District President , All India Ideal Teachers Association ( AIITA) 
பேராசிரியர் சையது உசேன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளரும், JIH - இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் ( ICC ) பொறுப்பாளருமான 
ஜனாப்: தாயீ நஜீர் ஹுசைன் வரவேற்புரை ஆற்றி இந்நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தி கொடுத்தார்கள்
 

இந்நிகழ்ச்சியின் மூலமாக நபிகள் நாயகம் அவர்களை குறித்த தெளிவான செய்தியை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்துக்காக மட்டும் அனுப்பப்பட்ட நபி கிடையாது. அவர்கள் ஒட்டுமொத்த உலகத்திற்கும் நபி அவர்களுடைய பணிகள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொதுவான பணியைத் தான் அவர் செய்தார்கள் 
இஸ்லாம் காட்டித் தந்த வாழ்வை வாழ்ந்து மனித குலத்திற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தாரே தவிர தனிப்பட்ட ஒரு சமூகத்திற்கு குழுக்கோ இனத்துக்கோ அவர்கள் நபியாக வரவுமில்லை அப்படியான பணிகளை செய்யவில்லை அவர்கள் அனைவருக்குமான் நபியாக அனைவருக்குமான வழிகாட்டியாக திகழ்ந்தார் என்கின்ற செய்தியை மிக அழகிய முறையில் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

மாலை 5 மணிக்கு இந்நிகழ்ச்சி துவங்கி  6:10 மணி அளவில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மக்களுக்கு தேநீர் வழங்கப்பட்டதோடு  இரவு உணவும் வழங்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.


kms pico download