News Channel

புதுச்சேரி சுற்றுலா மற்றும் பொதுப்பணி துறை அமைச்சருடன் சந்திப்பு - JIH புதுச்சேரி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் நடத்திவரும்
 ‘ஒழுக்கமே சுதந்திரம்’ பரப்புரை சந்திப்பின் ஒரு பகுதியாக, புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக,

புதுச்சேரி சுற்றுலா மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் மாண்புமிகு திரு. கே. லக்ஷ்மிநாராயணன் அவர்களை, இன்று (26.9.2024, வியாழக்கிழமை) காலை சந்தித்து ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை குறித்து அறிமுகம் செய்து, ‘ஒழுக்கமே சுதந்திரம்’ பிரச்சார நூல்களையும் வழங்கினர்,

சந்திப்பின் போது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் நடத்திவரும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை குறித்து விளக்கப்பட்டது, குறிப்பாக சமூகத்தில் இன்று நிலவி வரும் ஒழுக்க சீர்கேடுகள் குறித்தும், பொதுமக்களின் பொறுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது,

மேலும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எனும் பேரியக்கம் முன்னெடுத்துள்ள ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை ஒழுக்கரீதியாக சமூகத்தை கட்டமைக்க வேண்டிய அவசியத்தைக் குறித்தும் விளக்கினர்.