News Channel

ஒழுக்கமே சுதந்திரம் பள்ளி முதல்வர்களுடன் ஒரு சந்திப்பு- மணப்பாறை

  ஒழுக்கமே சுதந்திரம் பள்ளி முதல்வர்களுடன் ஒரு சந்திப்பு- மணப்பாறை 
 எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் செப்டம்பர் 5-2024  அன்று ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாகவும் JIH  அகில இந்திய தலைமையின் ஒழுக்கமே சுதந்திரம்  பரப்புரையின் ஒரு பகுதியாகவும் மணப்பாறை பகுதியை சுற்றியுள்ள பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களை சந்திக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
JIH மணப்பாறை கிளையின் மகளிர் குழுவினர் மணப்பாறை பகுதியில் உள்ள லட்சுமி மெட்ரிகுலேஷன் ,
குரு மெட்ரிகுலேஷன் ,
 நகராட்சி பெண்கள் பள்ளி ஆகிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களையும் பள்ளி நிர்வாகிகளையும் சந்தித்து ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஜமாஅத்தே இஸ்லாமிக் ஹிந்தின் பரப்புரை பிரதிகளையும்
 மேலும் உதயதாரகை பத்திரிக்கை இதழ்களையும் வழங்கி அவர்களிடம் ஒழுக்கமே சுதந்திரம் என்னும் தலைப்பில் உரையாடினார்கள். 
மணப்பாறை பள்ளிகளில் பயிலும் மக்களுக்கு ஒழுக்கத்தை மாண்பை உணர்த்தும் விதமாகவும் ஒழுக்கம் பேணுதலின் அவசியத்தை  உணர்த்தும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 பள்ளிகளின் முதல்வர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தருவதாகவும் மாணவ மாணவியர்களிடையே ஒழுக்க மேம்பாடு குறித்து வரும் காலங்களில் பயிற்சி அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
 இறைவனின் அருளால் சந்திப்பு இனிதே நிறைவுற்றது