News Channel

ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களைச் சந்தித்து ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மகளிர் அணியினர் பகிர்ந்து கொண்டனர்.

ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 25 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களைச் சந்தித்து ‘ஒழுக்கமே சுதந்திரம்’ பரப்புரை குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் கலந்துரையாடல் நடத்தினர். 

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி கோவையில் உள்ள 25க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்களைச் சந்தித்து ஆசிரியர்கள் தின வாழ்த்துக்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மகளிர் அணியினர் பகிர்ந்து கொண்டனர்.  

தொடர்ந்து ஆசிரியர்களோடு ‘ஒழுக்கமே சுதந்திரம்’ பரப்புரை குறித்து புத்தகங்கள், மடக்கோலைகள் பரிசாக வழங்கி கலந்துரையாடினர். 

இச்சந்திப்பில் 400க்கும் அதிகமான ஆசிரியர்களைச் சந்தித்தனர். 

#moralityisfreedom #islam #teachersday #jih #kovai