News Channel

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை இயக்க தெருமுனை பிரச்சாரம்

ஒழுக்கமே சுதந்திரம் 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை பெண்கள் வட்டம்
 சார்பாக 07.09.2024 சனிக்கிழமை மாலை கோட்டையில் தெருமுனை பிரச்சாரம்
 சிறப்பாக நடைபெற்றது. 

 நகர தலைவர் சகோதரர் சிபகத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

 முதலில் இறைவசனம் மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி ஓதினார். .

  ஷாஹி மஸ்ஜித் செயலாளர் சகோதரர் பையாஸ் பாஷா மற்றும் துணைச் செயலாளர் சகோதரர் முஹம்மத் முன்னிலை வகித்தனர்.

பெண்கள் கண்ணியம் ஒழுக்கம் பற்றி சகோதரி அர்ஷியா சாஹெபா மற்றும் நாட்டில் நிலவும் ஒழுக்க சீர்கேடுகள் அதன் தாக்கம் நம் வரை எப்படி ஊடுருவி இருக்கிறது என்பதை ராபிதுல் உலமா தலைவர் சகோதரர் 
மௌலவி இஸ்மாயில் ஃபலாஹி சிறாப்பான முறையில் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியை சகோதரர் சுஹேல் அஹ்மத் வழிநடத்தினார்.