News Channel

JIH ladies wing

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி நடத்தும் "ஒழுக்கமே சுதந்திரம்" எனும் நாடு தழுவிய பரப்புரையின் கருர் கிளையின் 
செயல்திட்டத்தின் அடிப்படையில் இன்று (05-09-2024)
 ஆசிரியர் தினம் சந்திப்பு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 காலையில் 
வாங்கப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களை சந்தித்து ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் கூறப்பட்டது. 
அப்பள்ளியின் காலை பிரார்த்தனை (Prayer) நேரத்தில் பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு சிறிய உரை நிகழ்த்தப்பட்டது. சகோதரர். ஜஃபருல்லாஹ் அவர்கள் இந்த உரையை நிகழ்த்தினார்கள். அதன் பிறகு பள்ளி ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கி "ஒழுக்கமே சுதந்திரம்" புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

 மாலையில் சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு ஆசிரியர்கள், 
தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோருக்கு வாழ்த்துகள் கூறப்பட்டு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நாளை (06-09-2024) காலை இப்பள்ளியின் பிரார்த்தனை நேரத்தில் பரப்பரையின் மையக்கருத்தில் பள்ளி மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்ச்சிகளில் கிளையின் பெண் ஊழியர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.