ஒழுக்கமே சுதந்திரம் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் மகளிர் அணி சார்பாக செப்டம்பர் மாதம் முழுவதும் ஒழுக்கமே சுதந்திரம் மைய கருத்தில் நாடு முழுவதும் பரப்புரை நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டத்தின் சார்பாக காண்டை பகுதியில் ஒழுக்கமே சுதந்திரம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 4.9. 2024 புதன்கிழமை அன்று மாலை 7 மணியளவில் காண்டை பகுதியில் ஒழுக்கமே சுதந்திரம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முன்னதாக காண்டை ஜும்ஆ பள்ளிவாசல் இமாமும் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் ஊழியருமான மௌலவி அப்துல் மாலிக் ஸலாமி அவர்கள் கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும், மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளருமான ஜனா ப்; நஜீர் ஹுசைன் சாஹிப் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்பு உரையாற்றினார். உரையில் அவர் கூறுகையில் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் தற்போது நாட்டின் சூழலை கவனித்து ஒழுக்கமே சுதந்திரம் என்கின்ற மையக்கருத்தில் நாடு தழுவிய பிரச்சாரத்தை கடைபிடித்து வருகின்றது. காரணம் இன்றைக்கு மனித சமுதாயத்தின் வாழ்வில் ஒழுக்கம் என்பது அகன்று செல்லக்கூடிய ஒரு அபாய நிலையில் உள்ளன.
* கணவன் - மனைவி உறவுகளை சிதைக்கக்கூடிய அபாயம் .
* தனிமனித ஒழுக்கம் சிதைவு,
* சுதந்திரம் என்ற பெயரில் ஆபாசங்கள் மிகைத்து உள்ளது
இந்த மாபெரும் வழிகேடுகள் மனித சமுதாயத்தில் இது வழிகேடாக இருக்கின்றது என்பது கூட தெரியாமல் மக்கள் இயல்பாக வாழ்வதை பார்க்க முடிகின்றது.
இக்காரியங்களால் நாடும் நாட்டு மக்களும் ஒழுக்க வீழ்ச்சியில் எவ்வளவு தூரம் சென்றிருக்கிறார்கள் என்பதை புரிய முடிகிறது. ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றால் நாடும், நாட்டு மக்களும் ஒழுக்கம் உள்ளவர்களாக ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் தனிமனித உயர்வும் சரி சமுதாயத்தின் உயரும் சரி ஒரு நாட்டின் உயர்வும் சரி திளைத்து நிற்கும்.
இன்றைக்கு ஆணுக்கும் ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் உறவுகளை மேற்கொள்ளக்கூடிய ஒரு வழிகேட்டின் உச்சாணிக்கு சென்று கொண்டிருக்கிறது. மனித சமுதாயம் ஒழுக்க வீழ்ச்சியில் நடை போடுகிறார்கள் என் உடல் என் உரிமை என்கின்ற கோஷம் மிகைத்திருக்கிறது. இதன் விளைவாக அடுத்த தலைமுறைக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்பது கூட புரியாத அவல் நிலை ஏற்பட்டிருக்கிறதை உணர்த்தும் வகையில் அவருடைய உரை அமைந்தது இதில் காண்டை முஸ்லிம் ஜமாத் ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி நடைபெற்றும் போது உரையை கேட்டு அப்பகுதியில் இருக்கக்கூடிய சகோதர சமுதாயத்தை சார்ந்தவர் சவுந்தர் என்பவர் நிகழ்ச்சியில் அனுமதி பெற்று பள்ளிவாசலில் வந்து அமர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.