News Channel

மணப்பாறை வட்டார உலமக்கள் சபை சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை நிகழ்ச்சி

(03.09.2024) 
செவ்வாய் கிழமை காலை 9:00 மணி அளவில் மணப்பாறை இஸ்லாமியா பள்ளிவாசலில் வைத்து
 தமிழ் மாநில ராபிததுல் உலமா சபை சார்பாக “ஒழுக்கமே சுதந்திரம்” என்ற பரப்புரை நிகழ்ச்சி மண்ப்பாறை வட்டார
 ஆலிம்களுக்காக நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சிக்கு வட்டார ஜமாஅத் உலமா சபையின் கெளவர தலைவர் மவ்லவி முஹம்மத் அலி ஃபாஸி அவர்கள்
 தலைமையேற்றார்கள். வட்டார ஜமாஅத் உலமா சபையின் தலைவர் மவ்லவி முஹம்மத் இக்பால் தாவூதி முன்னிலை வகித்தார்கள். நிகழ்சியை ஜனாப் அஃப்ஸலுல் உலமா செய்யித் முஹம்மத் வழிநடத்தினார்கள். 
மவ்லவி அஹ்மத் முஹ்யித்தீன் ஃபைஜி “ஒழுக்கமே சுதந்திரம்” என்ற பரப்புரை நிகழ்வின் இன்றைய தேவை,
 அவசியம், அதில் ஆலிம்களின் பங்களிப்பு மிக மிக முக்கியம் என்ற செய்தியை வலியுறுத்தி உரையாற்றினார்கள். 
இதில் 12 ஆலிம்களும், மணப்பாறை ஊர் ஜமாஅத் தலைவர், பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். 
இந்நிகழ்வில் பெண்கள் மத்ரஸா, மக்தப் மத்ரஸா மாணவ, மாணவிகளுக்கு “ஒழுக்கமே சுதந்திரம்” பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, மற்றும் மக்தப் மத்ரஸா மாணவர்களை வைத்து மனித சங்கிலி, ஊர்வலம் நடத்துவது, நிறுவனங்களில் பணி செய்பவர்கள் நம்முடன் பணி செய்பவர்களுக்கும் “ஒழுக்கமே சுதந்திரம்” என்பதை உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இறுதியாக மணப்பாறை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொறுப்பாளர் ஜனாப் ஜபருல்லாஹ் சாகிப் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்த்து. 
(அல்ஹம்து லில்லாஹ்) எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!!!