எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் சாந்தியும் சமாதானத்தையும் அருளவானாக.
ஜமாத்தை இஸ்லாமிக் மணப்பாறை கிளையின் சிறப்பு கூட்டம் 03.10.2023 செவ்வாய்க்கிழமை அன்று தக்வா பள்ளிவசலில் மாஷா அல்லாஹ் சிறப்பாக நடந்தது.
நபிகளாரின் ஹிஜ்ரத் மற்றும் அது தரும் படிப்பினைகள் என்ற தலைப்பின் கீழ் சகோதரர் ஷபீர் அஹமத் சாஹிப் அமீரே மகமி திண்டுக்கல் அவர்களின் PPT
காணொளி வகுப்பு நடைபெற்றது.சகோதரர் சையத் முகமது சாஹிப் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் முன்னுரை வழங்க கூட்டம் இனிதே தொடங்கியது
அது சமயம் ஹிஜ்ரத் சம்பந்தமான விளக்கமும் அதற்காக நோக்கமும் சகோதர சகோதரிகளிடம் விளக்கப்பட்டது.
ஹிஜ்ரி ஆண்டு திட்டமிடல் பயணத்தின் நோக்கம் பயணத்திட்டம் பயணத் தயாரிப்பு
ஹிஜ்ரி ஆண்டு மொஹர்ரம்
ஆசுரா நோன்பு ஆகியவற்றின் விளக்கமும் interactive முறையில்
நடைபெற்றது.
மாஷா அல்லா இறைவனின் கிருபையால் கூட்டம் இனிதே நடைபெற்றது.
இப்பணிக்காக ஒத்துழைத்த மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மணப்பாறை கிளை