News Channel

ஒழுக்கமே சுதந்திரம் பிரச்சார இயக்கத்தின் தொடக்க விழா நிகழ்வுகள் கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

கோவை பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டன், கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட், கோவை துடியலூர் தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் துவக்க விழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இறுதியாக தொப்பம்பட்டி பகுதியில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள் தங்கள் வாழ்வில் ஒழுக்கம் பேணுவது தொடர்பான உறுதிமொழி வாசகங்கள் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் ஜமாஅத் கோவை மனித வள மேம்பாட்டுத் துறைச் செயலாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்வுகளில் சகோதர சமுதயாத்தினர் உட்பட ஏராளமான நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.