News Channel

JIH ladies wing Tirchy unit Activity

உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி திருச்சி கிளை சார்பாக 24/08/24 அன்று உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நூருல் ஹுதா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதல் அமர்வாக ஒழுக்கமே சுதந்திரம்-நாடு தழுவிய பரப்புரை குறித்து 
பரப்புரை விளக்கக் கூட்டம்
 நடைபெற்றது.

குத்பிஷா நகர் வட்ட பொறுப்பாளர் சகோதரி.பர்ஜானா அவர்கள் அல் அஃராப் அத்தியாயம் 175-179 வசனங்கள் கிராத் ஓத,திருச்சி கிளை நாஜிமா சகோதரி.மும்தாஜ் அவர்கள் 
பரப்புரை ஏன்? எதற்கு?
 என்ற தலைப்பிலும் ,திருச்சி கிளை தலைவர் சகோதரர் K.ஹஜ் மைதீன் அவர்கள் concept paper
குறித்தும் விளக்கம் அளித்தார்கள்.


இரண்டாம் அமர்வாக பேச்சாளர் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. பரப்புரையின் திருச்சி கன்வினர் சகோதரி.பைரோஸ் அவர்கள் இன்றைய சூழலில் நிலவும் ஒழுக்க சீர்கேடு பிரச்சனைகள் குறித்தும், துணை நாஜிமா சகோதரி.பரக்கத்துணிஸா அவர்கள் பரப்புரையின் வழிகாட்டுதல் குறித்தும் பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியினை அண்ணா நகர் வட்ட பொறுப்பாளர் சகோதரி.மெஹராஜ் அவர்கள் சிறப்பாக வழி நடத்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்