கும்பகோணம் GIO (Girls Islamic Organization) சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்களுக்கான விளையாட்டு போட்டி 27.08.2023 ஞாயிறு அன்று கும்பகோணம் அல் அமீன் மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி சரியாக காலை 9:30க்கு ஆரம்பிக்கப்பட்டது.
தலைமை
சகோதரி சுமையா யாசிர்
தலைவர் கும்பகோணம் GIO
முன்னிலை ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் தலைவர் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை
இந்த விழாவை சீமாட்டி உரிமையாளர் ஹாஜி ஜனாப். பஷீர் அஹமத் அவர்களும்
கிரேட் விங்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் ஹாஜி ஜனாப். ஜாகிர் உசேன் அவர்களும் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்கள்
வாழ்த்துரை ஜனாப். முகமது யூனுஸ் முன்னாள் தலைவர் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் அவர்களும்
ஜனாப் P.S. யூசுப்
தலைவர் கிஸ்வா கும்பகோணம் அவர்களும் வழங்கினார்கள்
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு அல் அமீன் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் முன்னாள் முதல்வர் ஜனாப் சுபஹான் (அட்மினிஸ்ட்ரேஷன் ஆபிசர் ) சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கும்பகோணம் ரபி அசோசியன் உரிமையாளர் இன்ஜினியர் ஹாஜி ஜனாப். முஹம்மது ரஃபி அவர்கள் பரிசளித்து உரையாற்றினார்கள்
பிஸ்மி புக் ஸ்டோர் உரிமையாளர் ஹாஜி ஜனாப் M.Y. சம்சுதீன் அவர்கள் பரிசளித்தார்கள்
இந்த நிகழ்ச்சியில் செயின்ட். ஆனிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அல் அமீன் ஸ்கூல் இதயா காலேஜ் திருவிடைமருதூர் மதரஸா மேலக்காவேரி மதரஸா மற்றும் GIO கும்பகோணம் மற்றும் நாச்சியார் கோவில் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் அல் அமீன் மெட்ரிகுலேஷன் ஸ்கூல், செயின்ட் அண்ட் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் மற்றும் இதய காலேஜ் PET ஆசிரியர்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை ஒத்துழைப்பு செய்த ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள்
கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் (ஆண்கள்) உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.
நன்றி உரை கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் உரையாற்றினார்கள்.
கலந்து கொண்டவர்கள் 200 மாணவிகள்