News Channel

ஒழுக்கமே சுதந்திரம் - சமுதாய தலைவர்கள் சந்திப்பு

ஆகஸ்ட் 28-2023 மணப்பாறை . ஜாமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையின் வழிகாட்டுதலின்படி ஒழுக்கமே சுதந்திரம் எனும் அடிப்படையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.சமுதாய ஆதரவை திரட்டும் அடிப்படையில் 
நகர் மன்ற தலைவர்(municipal  chairman.)
கீதா மைக்கேல் ராஜ்
நகர் மன்ற உறுப்பினர் 
ராஜரத்தினம் ஆகியோரை சந்தித்து ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை இயக்கம் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது .

ஜமாத்தே இஸ்லாமி மகளிர் வட்டம் முன்னெடுக்கும் மனித சங்கிலி,
 பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக நகர் மன்ற தலைவர் வாக்குறுதி அளித்தார்.

மாநிலச் செயலாளர் SN.சிக்கந்தர் அவர்கள் நகர் மன்ற தலைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மாவட்ட பொறுப்பாளர் *சையது முகமது சமரசம் இதழை  வழங்கினார்.

 மேலும் மணப்பாறை ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்து ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது நிகழ்வில் மணப்பாறை ஜமாத் தலைவர் முகமது அனிபா  மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.