News Channel

திருச்சி சத்திய சோலை இஸ்லாமிய தகவல் மையத்தில் நண்பர்கள் நிகழ்ச்சி

28/09/2023 வியாழன் அன்று திருச்சி சத்தியச்சோலை இஸ்லாமிய தகவல் மையத்தில் நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜ.இ.ஹி திருச்சி கிளை தலைவர் முனைவர் ஹஜ் மைதீன் தலைமை தாங்கினார். முனைவர். சே.சுகவனேஸ்வரன் உதவி பேராசிரியர் - தமிழ் துறை, ஜமால் முகமது கல்லூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு IFT வெளியீடான  "அண்ணலாரின் ஆளுமைகள்" புத்தகத்தை ஆய்வு செய்து, அதன் சாரம்சத்தை கலந்து கொண்ட சகோதர சமுதாய அன்பர்களிடம் விளக்கினார்.

"அண்ணலாரின் பிறப்பு, அவரின் சமூகம், பொருளாதார கட்டமைப்புகள் மற்றும் அரசியல் வாழ்வு என இவ்வுலகில் வல்லரசுகள் சாதிக்க விரும்பும் அனைத்துமே 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே அவர் சாதித்து விட்டு சென்றுள்ளார். எனவே அவர் வழிமொழிந்துள்ள கருத்துக்களை பின்பற்றுவதன் மூலமாகவே நம்முடைய நாடும் நல்லரசாக விளங்கும் என தனது பகுப்பாய்வின் மூலமாக விளக்கினார்.

 இந்நிகழ்வில் பேராசிரியர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்  என ஐந்திற்க்கும் மேற்பட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.