News Channel

உலாமாக்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  கும்பகோணம் கிளை மற்றும் கும்பகோணம் ராபியத்துல் உலமா இணைந்து 21.07.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 மணி அளவில் கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை அலுவலகத்தில் உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
கும்பகோணம் ராபியத்தில் உலமா பொறுப்பாளர் மௌலவி அஹமது கபீர் மண்பையீ அவர்களின் ஒருங்கிணைப்பில்  கோயம்புத்தூர் ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி தாளாளர் மௌலவி முகமது இஸ்மாயில் இம்ததாதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலந்துரையாடல் நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் 20 க்கு மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொண்டார்கள்.