News Channel

புதிய தேவாலயம் திறப்பு விழா

"புதிய தேவாலயம் திறப்பு"

திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய தேவாலயம் திறப்பு விழா நடைபெற்றது.

தேவாலய திறப்பு விழாவிற்கு ஹவுஸிங் யூனிட் மகளிர் அணியினரை அவசியம் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள். 

அதன் பேரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
ஹவுசிங் யூனிட் மகளிர் அணி சார்பாக திறப்பு விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
தேவாலய பொறுப்பாளர்கள் இன் முகத்துடன் வரவேற்று தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள். 

மகளிர் அணியினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன்
மகிழ்ச்சியான குடும்பம், உதயதாரகை இதழ்கள் மற்றும் 
இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் ஹவுசிங் யூனிட் ஊழியர் வட்ட
 உறுப்பினர் ஊழியர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.