News Channel

ஃபுர்கான் நூலகம் திறப்பு விழா

கோவைக் கரும்புக்கடைப் பகுதியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்டத்தின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய  #ஃபுர்கான்_நூலகத்தை மாண்புமிகு தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி ராஜா அவர்கள் திறந்து வைத்தார். 
தமிழ், ஆங்கிலம் உருது ஆகிய மொழிகளில் இஸ்லாமிய, பொது மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராவதற்கான புத்தகங்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஃபுர்கான் நூலகத்தில் உள்ளன. 

-ו தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை பெண்களுக்காகவும்,
-ו மதியம் 1 மணி முதல் 4.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவியர்களுக்காகவும்,
-ו மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பொது மக்களுக்காகவும் நூலகம் திறந்திருக்கும். 

வாசிப்பை நேசிக்கும் மக்கள் உலக வரலாற்றில் மாபெரும் மாற்றத்திற்கு தயாராகிறார்கள். நீங்களும், உங்கள் குழந்தைகளையும் நூலகத்தோடு தொடர்பினை ஏற்படுத்த முயற்சி செய்திடுங்கள். நம்மிலும், சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்திடுவோம். 

#உலக_புத்தக_தினம்
#ஃபுர்கான்_நூலகம்

#WorldBookDay
#FurqanLibrary