News Channel

இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி


சகோதர சமயத்தவர்கள் கலந்து கொண்ட 
இஃப்தார் சிறப்பு நிகழ்ச்சி.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் 
மகளிர் அணி VGV கார்டன் ஆதரவாளர்கள் வட்டம் சார்பாக 
14.03.2024 அன்று
"சகோதர சமயத்தவர்கள்" கலந்து கொள்ளும்  சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இஃப்தார் நிகழ்வுகளை பார்வையிட்ட சகோதர சமயத்தவர்கள் இதுவரை நாங்கள் இதுபோன்ற நிகழ்வுகள் கலந்து கொண்டதே இல்லை.
மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
மிக ஒற்றுமையாக செயல்படுகிறீர்கள் இதுபோன்ற ஒற்றுமை எப்போதும் நமக்குள்ளே இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்கள்.

சமய நல்லிணக்கத்திற்கும் அக்கம் பக்கத்தில் நாம் வசிக்கின்ற பொழுது நம்மை தெளிவாக புரிந்து கொள்வதற்கும் 
இது போன்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் வலு சேர்க்கும் என்றும் தெரிவித்தார்கள்.

ரமலான் என்றால் என்ன?
இஃப்தார் என்றால் என்ன? நோன்பு ஏன் நோற்க வேண்டும்?
என்கின்ற வகையில் சிறிய உரை நிகழ்த்தப்பட்டன.

அல்ஹம்துலில்லாஹ் 
80 சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.
அதில் 20 சகோதர சமயத்து சகோதரிகள் கலந்து கொண்டார்கள்.