News Channel

ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி

"ரமலானே வருக"

திருப்பூர்  10.03.2024 மாலை 
முதலி பாளையம் ஹவுசிங் யூனிட் 
"மகளிர் அணி" சார்பாக  ரமலானே வருக மற்றும் மக்தப் மதரஸா ஆண்டு விழா
சிறப்பு நிகழ்ச்சி 
சின்னப் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

ஹவுசிங் யூனிட் ஊழியர் வட்ட நாஜிமா சகோதரி ஷக்கிலா பானு தலைமை வகித்தார்.

ஆலிமா ஷபானா அவர்கள் 
ரமலானே வருக என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
ரமலானை குறித்தும் ரமலானை பயன்படுத்திக் கொள்வது குறித்தும் ரமலானை வரவேற்று அதற்கு முன்னேற்பாடாக நாம் எப்படி எல்லாம் தயாராக வேண்டும் என்பதை குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார்.

மேலும்
மதரசு ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை ஊழியர் வட்ட பொறுப்பாளர்கள் 
பரிசு பொருட்களை வழங்கி உற்சாகப் படுத்தினார்கள்.

மேலும்
குழந்தைகள் இஸ்லாமிய அமைப்பு (CIO)
குழந்தைகள் தங்களது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக வழங்கி மகிழ்ந்தார்கள்.

60 க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பலன டைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.