News Channel

சாலிடாரிட்டி இளைஞர்கள் சந்திப்பு

சாலிடார்ட்டி மாநில செயலாளர் 

தென் மாவட்டங்களில் சாலிடார்ட்டி வளப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டுகளில் சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. அதேபோல் குறிப்பாக ராமநாதபுரம் பகுதிகளில் மதுரை இஸ்லாமிக் சென்டர் கிராமப்புறங்களில் ஆறு இடத்தில் தொடர்ந்து சாலிடார்ட்டி வகுப்பு நடைபெற்று வருகிறது .
இன்னும் நடைபெறக்கூடிய பகுதிகளில் சாலிடார்ட்டி வளர்ச்சிக்கும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கும் செயல் வீரர்களாக மாற்றும் நோக்கில் சாலிடார்ட்டி தமிழ் மாநிலச் செயலாளர் சையது அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 8 மற்றும் 18 ம் தேதிகளில் வருகை புரிந்தார்கள். 

8/2/2024தேதி சுற்றுப்பயணமாக முகமதியாபுரம் பகுதிக்கு வருகை புரிந்தார்‌ முகமதியாபுரம் பள்ளிவாசல் இமாம் அபூபக்கர் தாஃவதி அவர்களும் சாலிடார்ட்டி இளைஞர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்களும் ஆலோசனை நடத்தப்பட்டன. அதில் எதிர்வரக்கூடிய காலங்களில் சாலிடார்ட்டி உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். என்று முடிவு செய்யப்பட்டது. 

அதேபோல 18/2/2024ஆம் தேதி ரமலான் நகரில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அப்பகுதியின்  இளைஞர்கள் மற்றும் சாலிடார்ட்டி ஊழியர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ரமலான் நகர் பகுதிகளில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தும் நோக்கிலும் வரக்கூடிய காலங்களிலே அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சாலிடார்ட்டி தமிழ் மாநிலச் செயலாளர் சையது அவர்களும் ரமலான் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் சம்சுதீன் பைஜி அவர்களும் கலந்து கொண்டனர் .