News Channel

FIRE LESS COOKING

*fire less cooking*

இன்று 02.02.2024 வெள்ளிக்கிழமை மாலை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH )
திருப்பூர் கிழக்கு முதலிபாளையம் ஹவுஸிங் யூனிட் 
இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு
 (GIO) சார்பாக
நெருப்பு இல்லாமல் சமைப்பது எப்படி?
என்ற தலைப்பில் சமையல் போட்டி 
JIH அலுவலகத்தில் நடைபெற்றது.

மகளிர் அணி பொறுப்பாளர் ஷஹிலா பானு அவர்கள் வீண் விரயம் செய்யக் கூடாது என்ற திருக் குர்ஆன் வசனங்கள் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இஸ்லாமிய குழந்தைகள் அமைப்பு (CIO) குழந்தைகள்
 fire less cooking போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை நிரூபிக்கும் வகையில் சமையல் செய்தார்கள்.

நிகழ்ச்சிக்கு நடுவர்களாக
மாணவிகள் S.சுஹைனா,ஆலிமா ஃரபிதா,S.சப்ரின் ஆகியோர் செயல்பட்டார்கள் 

சிறந்த சமையல்களை தேர்வு செய்து
ஜாமென்ட்ரி பாக்ஸ், பெயிண்டிங் பாக்ஸ்,
பென்சில் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை வழங்கினார்கள். 

பெற்றோர்கள், மாணவிகள், குழந்தைகள் என் 20 பேர் கலந்து கொண்டார்கள்.

தகவல்: GIO முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் கிளை