News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மணப்பாறை கிளையின் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சி.

 
 ஜனவரி 26 2024 மணப்பாறை ஜமாஅத்தே இஸ்லாமிக் ஹிந்த் கிளையின் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 9:00 மணி அளவில் மணப்பாறை தக்வா பள்ளிவாசலில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. மணப்பாறை JIH 
கிளையின் தலைவர் ஜபருல்லாஹ் அவருடைய தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் மணப்பாறை நகர ஜமாத் தலைவர் J.முஹம்மது அனிபா பொருளாளர் ஜாஹீர் உசேன் மற்றும் மணப்பாறை ஜும்மா பள்ளிவாசலில் நிர்வாகிகள் திருமதி ராஜேஸ்வரி கண்ணன் (மன வள களை மன்றம்  ) யோகா ஆசிரியர் அவர்கள் மற்றும் வழக்கறிஞர் அகமது ஷரீஃப் ஆகியோர் கலந்துகொண்டனர். தன லட்சுமி வங்கியின் முன்னாள் மேலாளர் அஷ்ரப் அலி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள்.அனைவருடனும் கொடியேற்று விழா இனிதே தொடங்கியது.
 விழாவின் சிறப்பு நிகழ்வாக மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கி அவர்கள் சிறப்பிக்கப்பட்டார்கள்.   மணப்பாறை JIH
 கிளையின் செயலாளர் காதர் பாட்ஷா அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
 மணப்பாறை ஜமாத் நிர்வாகக் கமிட்டியின் உறுப்பினர்களான ஷாஜகான் மற்றும் இக்பால் அவர்கள் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.

  இறையருளால் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது