News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளை சார்பாக 10, 11,12 வகுப்பு மாணவர்களுக்காக JEE, NEET தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி 14.01.2024 அன்று மாலை நடைபெற்றது.

JEE, NEET தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருச்சி கிளை சார்பாக 10, 11,12 வகுப்பு மாணவர்களுக்காக JEE, NEET தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி 14.01.2024 அன்று மாலை நடைபெற்றது.

இதில் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான JEE நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெற தேவையான வழிகாட்டுதலை ஐஐடியில் படிக்கும் மாணவர்களான சகோ. ஆசிக் அன்வர் (B. Tech II year) மற்றும் சகோ. தாரிக் அன்வர் (B. Tech IV year) ஆகியோர் வழங்கினர். 

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வில் வெற்றி பெற தேவையான வழிகாட்டுதலை மருத்துவ கல்லூரி மாணவர் சகோ.  முஹம்மது தல்ஹா (MBBS, I year) அவர்கள் வழங்கினார்.

ஜமாஅத் கிளைத் தலைவர் முனைவர். ஹஜ் மொய்தீன் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். நிகழ்ச்சியின் அமைப்பாளர் முனைவர். அப்துல் ரஜாக் அவர்கள் தொகுத்து வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட ஆர்வமிக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.