News Channel

சகோதர சமுதாய அமைப்புகளுடன் ஒரு சந்திப்பு

 ஜனவரி 3 புதன்கிழமை -மணப்பாறை  தக்வா பள்ளிவாசலில் மணப்பாறை மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த நண்பர்களுடன் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மணப்பாறை கிளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது.


 அது சமயம் கலந்தாய்வு நிகழ்ச்சியில் மணப்பாறை JIH  கிளையின் தலைவர் ஜபருல்லா அவர்கள் கலந்து கொண்டார்கள். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களான சகோதரர் லாரன்ஸ் சகோதரர் முரளி மற்றும் சகோதரர் சுப்பிரமணி ஆகியோருடன் கலந்தாய்வு நடைபெற்றது.
 கருத்து பரிமாற்றத்தின் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய அமைப்பின் இதழான புதிய ஜனநாயகம் பத்திரிகையை  வழங்கினர்.
 ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் விடியீடான சமரசம் புத்தகத்தின் பிரதி அவர்களிடம் வழங்கப்பட்டது.
(நபியே!) விவேகத்துடனும், அழகிய அறிவுரைகள் மூலமாகவும் உம் இறைவனின் மார்க்கத்தின் பக்கம் அழைப்பீராக! மேலும், மிகச் சிறந்த முறையில் மக்களிடம் விவாதம் புரிவீராக! 
(அல்குர்ஆன் : 16:125)
 எனும் குர்ஆன் வசனங்களுக்கு இணங்க அவர்களுடன் அழகிய முறையில் விவாதம் நடைபெற்றது.
 நிகழ்வில் JIH மணப்பாறை கிளையின் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி இறைவனின் அருளால் இனிதே நிறைவுற்றது.