News Channel

மதுரை ஆட்சியர் சந்திப்பு



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மதுரை கிளை சார்பாக 28.07.2026 அன்று புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் திரு. நிதிஷ் கிருஷ்ணா, இ.ஆ.ப. அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மதுரை கிளையின் பொறுப்பு தலைவர் ஜனாப்  ஆவல் பீர் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், மகளிர் பிரிவு PRO சகோதரி ஆரிஃபா ராணி அவர்கள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வெளியீடுகளான ‘சாதி ஒழிய, சமத்துவம் மலர’ புத்தகம், ‘சமரசம்’ இதழ் மற்றும் மகளிரால் நடத்தப்படும் ‘உதயத்தாரகை’ இதழ் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கி அறிமுகப்படுத்தினார்.