செய்தி வெளியீடு
மதுரை
25.07.2026:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மதுரை கிளை சார்பில் 25.07.2026, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் ஜீவாநகர் இஸ்லாமிக் சென்டரில்
" செயல் துடிப்பு மிக்க ஊழியர் செயல் துடிப்பு மிக்க ஜமாஅத்..." என்ற கருப்பொருளில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜனாப். மருத்துவர் , ஆவல் பீர்
மகாமி மதுரை கிளை அவர்கள்
தலைமை தாங்கினார்.
தொடக்கமாக சகோதரர் முனவர் சுல்தான், அவர்கள்,
உறுப்பினர் JIH மதுரை கிளை
திருக்குர்ஆன் விரிவுரை வழங்கினார்.
அதைதொடர்ந்து:
மருத்துவர் ஆவல் பீர்
அவர்கள் தலைமை உரையாற்றினார்
இறை தொடர்பை வலுப்படுத்துதல் அதிகரித்தல் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து உரையாற்றினார்
அதற்கு அடுத்து சிறப்புரை: ஜனாப். A P அப்துல் நாசர், விரிவாக்க குழ பொறுப்பாளர் பாலக்காடு அவர்கள் "
1.ஜமாஅத்தின் தனித்தன்மையும் முன்னேற்றமும் மற்றும் 2. மக்களின் கருத்தை இஸ்லாத்திற்கு சாதகமாக மாற்றுதல்
ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்
அவர்கள் ஆற்றிய உரை பங்கேற்ற ஊழியர் அபிமானிகள் இடையே
எழுச்சியையும் புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தியது
இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஊழியர்கள் , அபிமானிகள் என 18 ஆண்களும் 58 பெண்களும் என சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சகோதரர் சுல்தான் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினார்
சகோதரர் முஹம்மது ரஃபி நன்றியுரையாற்றினார்
நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.