News Channel

மது மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை


கும்பகோணம்:
மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான Anti-Drug Campaign-ன் ஒரு பகுதியாக, கும்பகோணத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் காமராஜர் நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாணவர்களிடையே மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், அவற்றிலிருந்து விலகி இருப்பதன் அவசியம், போதை இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து விழிப்புணர்வு உரைகள் நிகழ்த்தப்பட்டன.

சகோதரர் முகமது யூனுஸ் மற்றும் சகோதரி ரஹ்மத் நிஷா ஆகியோர் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினர்.

மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்துகளை அறிந்து பயனடைந்தனர்.