Drug-Free Tamil Nadu Awareness Outreach Conducted in Thuvarankurichi
As part of the ‘Drug-Free Tamil Nadu’ campaign, Jamaat-e-Islami Hin....
இஸ்லாமிய மாணவியர் அமைப்பு (GIO) – திருச்சி கிளை சார்பாக, EMBRACING FEMININITY தேசிய அளவிலான பரப்புரையை முன்னிட்டு, 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை, “பெண்மையை போற்றுவோம்” என்ற மையக்கருத்தில் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியை வழக்கறிஞர் முஸ்பீரா அவர்கள் திறந்து வைத்து தொடங்கி வைத்தார். கண்காட்சியில் 10 தலைப்புகளின் கீழ் 50 காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் இன்றைய பிரச்சினைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகள், மனநலம் மற்றும் மனஅழுத்தம், இஸ்லாம் கூறும் பெண்ணியம், இஸ்லாம் போற்றும் முன்மாதிரி பெண்கள், ஹிஜாப் – தடையல்ல, இன்றைய காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பெண்களின் உரிமைகள், சட்டம் பெண்களை எவ்வாறு பாதுகாக்கிறது மற்றும் KNOW GIO ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு காட்சி அரங்குகள் இடம்பெற்றிருந்தன. மேலும், பார்வையாளர்களுக்காக விளையாட்டு (Games) அரங்குகள் மற்றும் பெண் தொழில்முனைவோரின் (Women Entrepreneurs) விற்பனை அரங்குகளும் இடம்பெற்று, பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்நிகழ்வில் 750-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு காட்சி அரங்குகளைப் பார்வையிட்டு பயனடைந்தனர். அறிவு, விழிப்புணர்வு, இஸ்லாமிய பார்வையில் பெண்மையின் மகத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இக்கண்காட்சி, கலந்து கொண்ட அனைவரின் பாராட்டைப் பெற்று சிறப்பாக நிறைவடைந்தது. – GIO திருச்சி
As part of the ‘Drug-Free Tamil Nadu’ campaign, Jamaat-e-Islami Hin....
மங்கலம் மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை இயக்கம் தெருமுனை....
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தானில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந....
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ....
Jamaat-e-Islami Hind’s Pudukkottai Circle organised a one-day speci....