செயல் துடிப்பு மிக்க ஊழியர் – செயல் துடிப்பு மிக்க ஜமாஅத்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருப்பூர் கிளை மகளிர் அணியின் சிறப்பு நிகழ்ச்சி
தேசம் தழுவிய பரப்புரையை முன்னிட்டு, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், திருப்பூர் கிளை மகளிர் அணி சார்பில், 29.07.2026 அன்று காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மகளிருக்கான சிறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருப்பூர் மகளிர் அணி நாஜிமா சகோதரி R. ஹம்சா பேகம் தலைமை தாங்கினார். அவர், "அடிப்படை கட்டாயப் பணிகள் மற்றும் கலிமாவின் விளக்கம்" என்ற தலைப்பில் வழிகாட்டும் உரையாற்றி, ஜமாஅத்தின் அடிப்படைப் பொறுப்புகள் மற்றும் இஸ்லாமிய அழைப்புப் பணியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
தொடர்ந்து, உறுப்பினர் சகோதரி ஜபீன் பானு, "செயல் துடிப்பு மிக்க ஊழியர் – செயல் துடிப்பு மிக்க ஜமாஅத்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தனது உரையில், இயக்கப் பணிகளில் ஊழியர்களின் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, ஒற்றுமை மற்றும் செயல்திறன் ஆகியவை வலிமையான ஜமாஅத்தை உருவாக்கும் அடித்தளமாக அமைகின்றன என்பதை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, புதிதாக ஊழியர்களாக இணைந்தவர்களும் ஆதரவாளர்களும் தங்களது கருத்துகள், அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த கலந்துரையாடல் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 40 சகோதரிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஊழியர் சகோதரி ஆயிஷா சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்.